பள்ளிபாளையம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). லாரி டிரைவர். இவர் வெப்படை அருகே லட்சுமிபாளையத்தில் உள்ள தனக்கு தெரிந்த நபரின் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை சின்னார் பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் செல்வம் இறந்து கிடந்தார். இதுகுறித்த அப்பகுதி மக்கள் வெப்படை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வெப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செல்வம் மனைவி விஜயா மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.