எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி (வயது 53). விசைத்தறி தொழில் செய்து வந்தார். இவருடைய கணவர் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை செந்தமிழ் செல்வி வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றவர் பின்னர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது செந்தமிழ் செல்வி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தமிழ் செல்வியை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து அவருடைய மகள் சவுந்தர்யா திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.