கிருஷ்ணகிரியில் விபத்தில் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரியில் விபத்தில் தொழிலாளி பலி

Update: 2022-10-27 18:45 GMT

வாணியம்பாடி அப்துல் சமத் தெருவை சேர்ந்தவர் ஷபி அகமது (வயது 35). தொழிலாளி. இவர் கிருஷ்ணகிரியில், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் முன்பு கடந்த 25-ந் தேதி இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஷபி அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்