குமாரபாளையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி கட்டுமான நிறுவன மேலாளர் பலி

குமாரபாளையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி கட்டுமான நிறுவன மேலாளர் பலி

Update: 2022-09-20 18:45 GMT

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டுமான நிறுவன மேலாளர் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

மேலாளர்

கோவை சாய்பாபா காலனி காந்தி நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 50). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் குடிநீர் வடிகால் வாரிய கட்டுமான பணி ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று காலை 11.30 மணி அளவில் குமாரபாளையத்தில் இருந்து பல்லக்காபாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரபாளையம் பவர்ஹவுஸ் அருகே சென்றபோது முன்னால் சென்ற அரசு டவுன் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது தெருநாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடி வந்து மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது.

விசாரணை

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த குமாரசாமி அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற குமாரபாளையம் போலீசார் குமாரசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான குமாரசாமிக்கு வைதேகி என்ற மனைவியும், நிவேதா என்ற மகளும், அபினேஷ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்