பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி;
பர்கூர்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கஜேந்திர சிங் (வயது 28). இவர் பர்கூர் தாலுகா ஜெகதேவியில் தங்கி அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3-ந் தேதி எலக்ட்ரிக்கல் மோட்டார் ஒன்றின் பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்ேபாது திடீரென மின்சாரம் தாக்கியதில் கஜேந்திரசிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.