சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி சாவு

சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி சாவு

Update: 2022-07-23 17:59 GMT

ஊத்தங்கரை:

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எஸ்.பட்டிவள்ளுவர்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 20-ந் தேதி நண்பருடன் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சிங்காரப்பேட்டை- திருப்பத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகனூர்பட்டி அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்