காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி ஊர்வலம்
கே.வி.குப்பத்தில் காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
கே.வி.குப்பம், காமாட்சி அம்மன் பேட்டையில் காளியம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, 108 பால்குடம் அபிஷேகம், இரவில் அலகுகுத்தி தீச்சட்டி ஊர்வலம், வீதி உலா, வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி ஆட்டங்கள், சாமி தரிசனம், அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.