கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-10-19 10:29 GMT

திருப்பூர்

திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு மிகவும் குறுகலான சாலையாகும். இந்த சாலை பல்லடம் மற்றும் தாராபுரம் சாலைகளை காங்கயம் சாலையுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். எனவே இந்த சாலையில் போக்குவரத்து எப்போதும் மிகுந்து காணப்படுவதால் சாலையை விரிவுபடுத்துவதற்காக சாலையோர கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. சாலையோரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கட்டும் பணிகளும் நடைபெற்று வந்தது. ஆரம்பத்தில் வேகமெடுத்த பணிகள் தற்போது பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது.

சில கட்டிடங்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமலே உள்ளது. இதனால் பாதாள சாக்கடை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குப்பைகளும் அதிக அளவில் கால்வாயினுள் கிடக்கிறது. தற்போது அடிக்கடி மழை பெய்துவருவதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்