வழிந்தோடும் கழிவுநீரால் பயணிகள் அவதி

வழிந்தோடும் கழிவுநீரால் பயணிகள் அவதி

Update: 2022-08-24 12:24 GMT

காங்கயம்

காங்கயம் பஸ் நிலையத்தில் தினசரி அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து ரவுண்டானா பகுதியில் பஸ் வெளியேறும் இடத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு குழாய் வழியாக கசியும் கழிவுநீர், பஸ் நிலைய வளாகத்தில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது. இதனால் பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும், கழிவுநீர் கசியும் குழாயை சரி செய்து, பஸ் நிலைய வளாகத்தில் நீர் வழிந்தோடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்