குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு பயிற்சி முகாம்
சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கு குழந்தைகளுகான டையோரியா (வயிற்றுப்போக்கு) தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை அங்கன்வாடி மையத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓவோரஸ் சர்க்கரை கரைசல், சிங் துத்த நாக மாத்திரை வழங்கப்படும். இப்பயிற்சிக்கு மருத்துவ அலுவலர் கிஷோர் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் லட்சுமி, மெர்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் குழந்தைகளுக்கு டையோரியா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஓவாரஸ் கரைசல், துத்தநாக மாத்திரைகள் எவ்வாறு பயன்படுத்து குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.