திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, அம்மன் பிறப்பு, திருக்கல்யாணம், குறவஞ்சி நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று அம்மன் வீதி உலா நடந்தது.
இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் உடையார்பாளையம், வாணதிரையன்பட்டினம், பெரியநாகலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை ஊர் மக்கள் மற்றும் கிராம நாட்டாமைகள் செய்திருந்தனர்.