தேன்கனிக்கோட்டை இளம்பெண் தற்கொலை

Update: 2023-09-06 19:30 GMT

தேன்கனிக்கோட்டை:-

தேன்கனிக்கோட்டை பாலாஜி லேஅவுட்டை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரித்தி (வயது 23). இவர்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். 3 வயதில் ஒரு மகன் உள்ளான். நேற்று முன்தினம் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த பிரித்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்