விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தர்ணா போராட்டம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-06-20 17:35 GMT


புதுச்சேரி செம்பியம்பாளையத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரும், இவருடைய மனைவி உமாபார்வதியும் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிவாஜி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


அந்த மனுவில், விழுப்புரம் அருகே பூசாரிப்பாளையம் கிராமத்தில் எனக்கு சொந்தமாக வீடு, நிலம் உள்ளது. ஆனால் வேறு ஒருவர் பெயரில் தவறுதலாக பட்டா எண் மாறியுள்ளது. இதனை ரத்து செய்து எனது பெயருக்கு பட்டா எண் வழங்க வேண்டுமென வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கோட்டாட்சியர் என் மனு மீது விசாரணை நடத்தி பட்டா வழங்கக்கோரி, தாசில்தாருக்கு பரிந்துரை செய்தார்.


அதன் விவரமும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால் விழுப்புரம் தாசில்தார் எனக்கு பட்டா வழங்காமல் அலட்சியமாக இருந்து வருகிறார். எனவே மாவட்ட கலெக்டர், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்