தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் விருதுநகர் அகமது நகர் பகுதியில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் நிறைவுரையாற்றினார். போராட்டத்தின் போது அரசு அறிவித்துள்ள சத்துணவு திட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர் மூலமாக வழங்க வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் எஸ்தர் நன்றி கூறினார்.