மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2022-12-28 21:48 GMT

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலையில் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் குடிநீர் கட்டணம் உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் குடிநீர் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு வந்த மேயர் சரவணன், அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்