தர்ணா போராட்டம்
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி பிரமுகர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அலுவலகத்தின் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், வழக்கறிஞருமான அய்யயலுசாமி தனது கழுத்தில் புரோ நோட்டுகளையும், காசோலைகளையும் மாலையாக தொங்கவிட்டபடி வந்து தர்ணா போராட்டம் செய்தார். கந்துவட்டி சட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதில் சில சட்ட திருத்தங்கள், சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.