சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
மயிலாடுதுறையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு, மாவட்ட தலைவர் செல்வி தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் அருள் வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாநில தலைவர் காயாம்பூ மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் லதா நன்றி கூறினார்.