போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் தர்ணா

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-29 18:52 GMT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) மண்டல தலைவர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். இதில், ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்கள் மற்றும் பணியில் இருக்கும் போது மரணமடைந்த தொழிலாளர்களுக்கு 2019-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 30 நாட்களுக்கு முன்பாக சட்டப்படி வழங்க வேண்டிய தீபாவளி முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உச்சவரம்பின்றி 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மணிமாறன், பொருளாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் சாமிஅய்யா, செந்தில்நாதன், அண்ணாத்துரை, சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா, பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஓய்பெற்ற நல அமைப்பு மாவட்டத் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்