தருமபுரி: சுற்றுலா பஸ் லாரி மீது மோதி விபத்து - 19 பேர் காயம்
தொப்பூர் கணவாயில் சுற்றுலா பஸ் லாரி மீது மோதிய விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம் பிக்கிலிகொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த 52 பேர் சுற்றுலா பஸ் மூலம் ராமேஸ்வரத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்மீக சுற்றுலா சென்றனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் ஆன்மீக சுற்றுலா முடித்துக் கொண்டு இன்று காலை பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த பஸ் தருமபுரி மாவட்டம் தொப்பூர் இரட்டை பாலம் அருகே கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் ராஜா(30) பலத்த காயமும், பஸ்சில் இருந்த 18 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய 19 பேரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.