தர்மபுரி மாதிரி பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு பயணம்

கோடை கொண்டாட்டமாக 5 நாள் சிறப்பு பயிற்சியாக தர்மபுரி மாதிரி பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு பயணம் சென்றனர்.

Update: 2022-06-03 18:26 GMT

தர்மபுரி:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் கோடை கொண்டாட்டம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு மாதிரி பள்ளியில் படிக்கும் பிளஸ்- 1 மாணவ -மாணவிகள் ஊட்டிக்கு புறப்பட்டனர். இவர்கள் 5 நாட்கள் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமிற்கு செல்வதற்கான அரசு பஸ்சை தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்