தர்மபுரி நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு

Update: 2023-04-21 18:45 GMT

தர்மபுரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சித்ரா சுகுமார் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சி துணை ஆணையாளராக மாற்றப்பட்டார். இதையடுத்து மேட்டூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த புவனேஸ்வரன் என்ற அண்ணாமலை இடமாற்றம் செய்யப்பட்டு தர்மபுரி நகராட்சி ஆணையாளராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகராட்சி துணை ஆணையாளராக செல்லும் சித்ரா சுகுமாருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்