கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்குஇன்ஸ்டாகிராம் காதலியை தேடி வந்த வாலிபருக்கு தர்ம அடி

Update: 2023-08-02 20:26 GMT

சூரமங்கலம்

கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்கு இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்த பெண்ணை தேடி வந்த வாலிபருக்கு தர்ம அடி கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் காதல்

கும்பகோணத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருக்கும், சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் இருவரும் இந்த செயலி மூலம் பழகி வந்தனர்.

இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த வாலிபர் தனது நண்பருடன் காதலியை தேடி சேலத்துக்கு காரில் வந்தார். பின்னர் அவர்கள் காதலியின் வீட்டின் அருகே நின்று இருந்தனர்.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் தனது காதலியை அழைத்து செல்ல வந்துள்ளதாக கூறினார்.

தர்ம அடி

இதை கேட்டதும் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் வாலிபரையும், அவருடைய நண்பரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவர்கள் வந்த காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 2 வாலிபர்களையும் பொதுமக்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்