விக்கிரவாண்டிபோலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்தாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீரென வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் போலீஸ் நிலைய வளாக பகுதியையும் அவர் பார்வையிட்டர். இதில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததால், அவர்களது பணிகளை பாராட்டும் விதமாக, போலீசாருக்கு பரிசாக ரூ.5 ஆயிரத்தை அவர் வழங்கினார். ஆய்வின் போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.