பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அரியலூர் கோதண்டராமசாமி கோவிலில் நேற்று, புரட்டாசி மாதம் பிறந்ததை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மஞ்சள் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கல்லங்குறிச்சி பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டு சென்றனர்.