வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சதுரகிரியில் தரிசனத்திற்கு 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதலே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
காலையில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலைப்பாதை வழியாக சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூைஜகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.