அலகு குத்திய பக்தர்கள் அந்தரத்தில் தொங்கி முருகனுக்கு மாலை
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அலகு குத்திய பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாறு மரகனுக்கு மாலை அணிவித்தது மெய்சிலிர்க்க வைத்தது.
வாணாபுரம்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அலகு குத்திய பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாறு மரகனுக்கு மாலை அணிவித்தது மெய்சிலிர்க்க வைத்தது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அந்த வகையில் வாணாபுரம் அருகே உள்ள குங்கிலியநத்தம் பாலமுருகன் கோவிலில் நேற்று காலை முருகனுக்கு பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.
பக்தர்கள் காவடி எடுத்தும் முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு வந்து முருகனுக்கு மாலை சாற்றினர். இதேபோல் பல்வேறு முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.