பாலமுருகன் கோவிலுக்கு பால்குடம், காவடி, அலகு குத்தி வந்த பக்தர்கள்

பாலமுருகன் கோவிலுக்கு பால்குடம், காவடி, அலகு குத்தி வந்த பக்தர்கள்

Update: 2023-04-05 18:10 GMT

மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டி கிராமத்தில் பாலமுருகன் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா நேற்று நடைபெற்றது. இந்த கிராமத்தில் இந்து, கிறிஸ்தவ மதத்தினர் உள்ளனர். இருமதத்தினரும் இணைந்து பங்குனி உத்திரவிழாவை கொண்டாடினர். முன்னதாக காலையில் முடிகண்டம் கிராமத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு கோலார்பட்டியை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அலகு குத்தியும் பால்குடங்கள், தீர்த்த குடங்கள், காவடிகள், அக்னி சட்டி ஆகியவை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மேளதாளம் அதிர்வேட்டு முழங்க சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோலார்பட்டி பாலமுருகன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பாலமுருகனுக்கு பாலாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அங்குள்ள செல்வ விநாயகருக்கும், பாலமுருகனுக்கும் சந்தனகாப்பு அலங்காரத்துடன் கூடிய அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் கோலார்பட்டி, முடிகண்டம், மேக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்