பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பொள்ளாச்சி அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.

Update: 2023-04-11 18:45 GMT

ஆழியாறு

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பக்தர்கள் வேல் குத்தியும், பறவை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்