வடலூர் ஞானசபையில் பக்தர்கள் ஜோதி தரிசனம்

வடலூர் ஞானசபையில் பக்தர்கள் ஜோதி தரிசனம் நடந்தது.

Update: 2022-10-18 19:50 GMT

வடலூர்:

வடலூர் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதை காண உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் மாத பூசத்தையொட்டி நேற்று 6 திரைகளை நீக்கி புரட்டாசி மாத ஜோதி தரிசனம் இரவு 7.45 மணி முதல் 8.30 மணிவரை நடைபெற்றது. நேற்று செவ்வாய்கிழமை என்பதால் வழக்கமான பூச நட்சத்திர நாட்களை விட கூடுதல் பக்தர்கள் திரண்டு ஜோதி தரிசனம் செய்தனர். இதனால் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக மருத்துவதுறையினரும், காவல்துறையினரும் நோய் தடுப்புக்காக கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முன்னெச்ரிக்கையுடன் இருக்க பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களை கண்டிப்பாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வரவேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்