பக்தர்கள் பால்குடம் எடுத்து,தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

பக்தர்கள் பால்குடம் எடுத்து,தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்;

Update:2022-05-24 02:32 IST

திருச்சி, மே.24-

திருச்சி கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 73-ம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 31-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் மற்றும் தீ மிதித்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோரையாற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, மயில்காவடி எடுத்தபடியும், அலகு குத்தியபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அபிஷேகமும், ஒண்டிகருப்புசாமி காவு பூஜையும், இரவு கிராமிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்குஅம்மன் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. 26-ந் தேதி விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்