திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

3 நாட்கள் தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-14 15:50 GMT

திருச்செந்தூர்:

3 நாட்கள் தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் முதல் இன்று (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து குவியத்தொடங்கினர். கார்கள், வேன்கள், பஸ்களில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்தனர்.

அலைமோதியது

இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் நள்ளிரவு முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்ததால் கடும் நெரிசல் காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் நிறைந்து காணப்பட்டது. எனவே பக்தர்கள் வந்த வாகனங்கள் திருச்செந்தூர் நகர் பகுதி, ரத வீதிகள், தெப்பக்குளம் பகுதி போன்ற இடங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்