புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-10-09 12:10 GMT

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதேபோல திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்