பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பிதிர்காடு முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-23 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே பிதிர்காடு பகுதியில் பஞ்சோரா சக்தி முனீஸ்வரர், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டுதல், சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. 10 மணிக்கு முக்கட்டியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பறவை காவடிகள் எடுத்து மற்றும் பால்குடம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். முக்கட்டி, பிதிர்காடு பஜார் வழியாக கோவில் வரை ஊர்வலம் நடந்தது. அப்போது பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7 மணிக்கு தேர் வீதிஉலா மாவிளக்குடன் கோவிலில் இருந்து புறப்பட்டது. காமராஜ் நகர், பிதிர்பாடு பஜார், முக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அக்கினி காவடி, காலை 10 மணிக்கு சக்தி கும்பம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊரை சுற்றி பாலவயல் ஆற்றில் குடிவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்