பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

திருவாடானையில் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-08-11 18:45 GMT

தொண்டி, 

திருவாடானையில் ஆற்றங்கரை மகாலிங்க மூர்த்தி கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, பொங்கல் வைபவம், மாவிளக்கு நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் திருவாடானை கைலாச விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், வேல்காவடி, மயில் காவடி, சிலாக்காவடி, பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மகாலிங்க மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்