தேவிபட்டினம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ஆடி அமாவாசையையொட்டி தேவிபட்டினம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
பனைக்குளம்,
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரக கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்று தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். நவபாஷாண கடலில் புனித நீராடியவர்கள் கடற்கரையில் அமர்ந்து இறந்த தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.பக்தர்கள் கூட்டத்தை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் செயல் அலுவலர் நாராயிணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதே போல் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலிலும் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து இறந்த தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.