எடப்பாடி பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

எடப்பாடி பெரியகாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் நடத்தினர்.

Update: 2022-05-30 21:07 GMT

எடப்பாடி,

எடப்பாடி நடுத்தெரு பகுதியில் உள்ள விநாயகர், பெரியகாண்டி அம்மன், பாலமுருகன், அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், மேட்டுத்தெரு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்த பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்