பாம்புக்கு பால் ஊற்றி, எறும்புக்கு சக்கரை வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

இடையக்கோட்டை அருகே பாம்புக்கு பால் ஊற்றி, எறும்புக்கு சக்கரை வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

Update: 2023-05-05 19:00 GMT


ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே நாரப்பநாயக்கன்பட்டியில் சுயம்புவாக உருவான மண்புற்றை ரேணுகாதேவி அம்மனாக கருதி கிராம மக்கள் வணங்கி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சித்ரா பவுணர்மியையொட்டி ஏரளமான பக்தர்கள் நேற்று அங்கு குவிந்தனர். பின்னர் வரிசையாக வந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்புற்றில் வசிக்கும் பாம்புக்கு பால் ஊற்றியும், புற்றில் வாழும் எறும்பு மற்றும் கரையானுக்கு தண்ணீரில் அரிசி, சக்கரையை கலந்து வைத்தும் வினோத வழிபாடு செய்தனர். இதனையடுத்து இதே பகுதியில் உள்ள அச்சம்மாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயமுத்தூர், திருப்பூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்