ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு ரூ.37 லட்சம் பக்தர்கள் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.37 லட்சத்து 17 ஆயிரம் காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-09-22 19:11 GMT

உண்டியல் திறப்பு

நாமக்கல் நகரில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 6 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இவை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் நேற்று கோவில் செயல் அலுவலர் இளையராஜா, அர்த்தனாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன், ஆய்வாளர் சுந்தர், கண்காணிப்பாளர் மணிமேகலை ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன.

ரூ.37 லட்சம் காணிக்கை

அந்த உண்டியலில் ரூ.37 லட்சத்து 17 ஆயிரத்து 665 ரொக்கம், 57 கிராம் தங்கம், 22 கிராம் வெள்ளி இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டபோது அந்த உண்டியலில் ரூ.49 லட்சத்து 21 ஆயிரத்து 265 ரொக்கம், 33 கிராம் தங்கம், 1,098 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நரசிம்ம சாமி கோவிலில் வைக்கப்பட்டு உள்ள 4 உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 315 ரொக்கம், 58 கிராம் தங்கம், 141 கிராம் வெள்ளி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்