சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
அமாவாசையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகைதந்தனர். தொடர்ந்து, அவர்கள் முடிகாணிக்கை செய்தும், அக்னிசட்டி ஏந்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், கோவிலுக்கு முன்புறமும், விளக்கு ஏற்றும் இடத்திலும் விளக்கேற்றி வழிபட்டனர்.
தொடர்ந்து, பக்தர்கள் வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.