வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையால் வைத்தீஸ்வரன் கோவிலில் திரளான பக்கதர்கள் குவிந்தனர்.
சீர்காழி:
தொடர் விடுமுறையால் வைத்தீஸ்வரன் கோவிலில் திரளான பக்கதர்கள் குவிந்தனர்.
வைத்தீஸ்வரன் கோவில்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகிய தெய்வங்கள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் செவ்வாயக்கிழமை தோறும் அங்காரகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
குவிந்த பக்தர்கள்
இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தொடர் விடுமுறை மற்றும் அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் உள்பட திரளானோர் வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று குவிந்தனர்.
இதனால் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பக்தர்களின் வாகனங்களால் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.