புகழிமலையில் பக்தர்கள் கிரிவலம்

புகழிமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2023-09-28 18:52 GMT

பவுர்ணமியையொட்டி புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி வரும் பாதையில் இரவு கிரிவலம் நடைபெற்றது. கிரிவலத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமாேனார் கலந்து கொண்டு கிரிவல பாதையில் வரிசையாக ஊர்வலமாக வந்தனர்.

அப்போது ஆறுநாட்டார் மலை என போற்றி வணங்கப்படும் புகழிமலையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேசுவரர் பெருமாள், சிவகாமசுந்தரி அம்மை உடனுறை நடராஜப்பெருமாள், புகழிமலை பாலசுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி பாடல் பாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்