பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவித்தனர்.

Update: 2023-09-10 22:45 GMT

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, முகூர்த்தம், கிருத்திகை ஆகிய நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிப்பது வழக்கம்.

அந்தவகையில் நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே மலைக்கோவில், அடிவாரம் பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் குவிந்ததால், கோவில் மின்இழுவை ரெயில்நிலையத்தில் கடும் கூட்டம் காணப்பட்டது. அதாவது பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால் மின்இழுவை ரெயிலில் பயணிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டினர். பக்தர்கள் கூட்டம் காரணமாக மலைக்கோவிலில் உள்ள பிரகாரங்கள், பொது, கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்