பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-03-11 16:06 GMT

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்துக்கு பிறகு மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று வாரவிடுமுறையையொட்டி வழக்கத்துக்கு மாறாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ரோப்கார், மின் இழுவை ரெயிலில் செல்ல பக்தர்களுக்கு முன்னுரிமை இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஒரு சில பக்தர்கள் முன்னுரிமை கேட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதை முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்