ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-07-23 13:19 GMT


ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடிக்கிருத்திகை

முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆடிக்கிருத்திகை விழாவும் ஒன்றாகும். இந்நாளில் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜலகண்டேஸ்வரர் கோவில்

ஆனால் இந்த ஆண்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் காவடி எடுத்துச் சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நேற்று காலையிலேயே நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளி தெய்வானை சண்முகருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.

வேலூர் பேரி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடிக்கிருத்திகைையயொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தி அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் காலை முதலேயே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில், சத்துவாச்சாரியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி, காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள 36 முருகன் கோவில்களிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் அங்கு 700 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.திரளான பக்தர்கள் காவடி எடுத்துச்சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்