பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
சாணார்பட்டியை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே உள்ள கே.அம்மாபட்டியில் காளியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா சாமிசாட்டுதல் நிகழ்ச்சியில் தொடங்கி நடந்தது.
இதையொட்டி மாவிளக்கு, பால்குடம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தீச்சட்டி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையடுத்து பக்தி பரவசத்துடன் ஏராளமானோர் பூக்குழி இறங்கினர். இதேபோல் தீச்சட்டி எடுத்து ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அம்மனை தரிசனம் செய்தனர்.