மீஞ்சூர் அருகே பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை

மீஞ்சூர் அருகே சிதிலமடைந்துள்ள பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-03-15 07:18 GMT

மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பெரும்பேடு ஊராட்சியில் உள்ள மாணிக்கேஸ்வரம் எனப்படும் லிங்கபையன் பேட்டை கிராமத்தில் அரணி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீமாணிக்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் செங்கற்களாலும், சுண்ணாம்பு பூச்சாலும் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவிலில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கோவிலை சுற்றி உள்ள கல்வெட்டுகள் உடைந்து காணப்படுகிறது.

கோவிலை சுற்றி இருந்த பிரகாரங்களின் உடைந்து காணப்படுவதுடன் கோவிலை பற்றிய கல்வெட்டுகள் உடைந்து காணப்படுகிறது. மேலும் கோவில் கோபுரத்தின் மீது புல், செடிகள் முளைத்து அதில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப கலைகள் முற்றிலும் தெரியாக அளவுக்கு சேதமடைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மட்டும் இல்லாமல் மீஞ்சூர் பகுதிக்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் இந்த வந்து செல்வது உண்டு.

இதனால் வரலாறு நிகழ்வுகள் எந்த காலத்தை சார்ந்தது என்பதை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சிதலமடைந்து காணப்படும் லிங்கபையன் பேட்டை ஸ்ரீ மாணிக்கேஸ்வரர் கோவிலை புனரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்