பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி அருகே பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-13 18:45 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. அதையொட்டி ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடங்கள், கரும்பாலைத் தொட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூக மக்களின் சார்பில் மண்டகப்படி நடந்தது.

அதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத் தில் வீதி உலா வந்து தினமும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் காமன்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்