பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

Update: 2023-05-21 21:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே ஓரசோலை அண்ணா நகர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பாண்டியன் பூங்கா பகுதியில் பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக அண்ணாநகர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்