பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-14 18:45 GMT

பொள்ளாச்சி

தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயர் கோவில்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் திருமூர்த்தி அணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பாலாற்றுக்கு வரக்கூடிய சிற்றோடைகள் வழியாகவும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

பக்தர்களுக்கு தடை

இதன் காரணமாக ஆற்றின் மையப்பகுதியில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. அதை கடந்து பக்தர்கள் சென்றால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு பக்தர்களின் நலன் கருதி பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தற்காலிகமாக கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.=

Tags:    

மேலும் செய்திகள்