கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அவனியாபுரம்
மதுரை அவனியாபுரம் பசும்பொன் நகர் மகா காளியம்மன் கோவில் 73-ம் ஆண்டு பங்குனி உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டுதல், பால்குடம் எடுத்தல், 16 அடி வேல் அலகு குத்தியும், பறவை காவடி, மயில் காவடி எடுத்தும் வந்தனர். மேலும் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் அக்னிச்சட்டிகள், மாவிளக்கு எடுத்து வந்தனர். அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அவனியாபுரம் பசும்பொன் நகர் மகா காளியம்மன் கோவில் விழா கமிட்டியாளர்கள் செய்து இருந்தனர்.